விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று நடைபெற்ற "தூய்மையே சேவை- 2024" வெகுஜன தூய்மை இயக்கம் : டாக்டர் தேவேஷ் சதுர்வேதி பங்கேற்பு

प्रविष्टि तिथि: 25 SEP 2024 6:26PM by PIB Chennai

நாடு முழுவதும் பரவியுள்ள அனைத்து துணை / இணைக்கப்பட்ட / தன்னாட்சி அமைப்புகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / கள அலுவலகங்களுடன் 'பழக்க வழக்கத் தூய்மை – கலாச்சாரத் தூய்மை ' என்ற கருப்பொருளுடன் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை அனுசரிக்கப்படும் தூய்மையே சேவை, 2024 இயக்கத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை தீவிரமாக பங்கேற்று வருகிறது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, கிருஷி பவனை சுற்றி நடந்து சென்று வழிநெடுகிலும் அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர் அவர் தனது குழுவினரை கிருஷி பவன் வளாகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று, நடைபாதைகளின் குப்பைகளை அகற்றினார். டாக்டர் தேவேஷ் சதுர்வேதி சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களால் உருவாகும் கழிவுகளை வீச குப்பைத் தொட்டிகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.
 

"தூய்மை பங்குதாரர்" என்ற தலைப்பின் கீழ், புதுதில்லி கிருஷி பவனின் நுழைவாயில் எண் 2-ல் இன்று மனிதச் சங்கிலி நடைபெற்றது. கிருஷி பவன் வளாகத்தைச் சுற்றி, துறையால் ஒரு நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருஷி பவனின் சுற்றுச் சுவர்களுக்கு வெளியே தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

----------
 


MM/KPG/DL


(रिलीज़ आईडी: 2058757) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी