விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தூய்மையே சேவை மற்றும் சிறப்பு இயக்கம் 4.0-க்காக துப்புரவுத் தொழிலாளர்களை கெளரவிக்க ஏற்பாடு செய்திருந்தன
Posted On:
25 SEP 2024 5:33PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் தலைமையகத்தில் தூய்மையே சேவை மற்றும் சிறப்பு இயக்கம் 4.0-க்காக துப்புரவுத் தொழிலாளர்களை கெளரவிக்க ஏற்பாடு செய்திருந்தன. இவற்றின் அதிகாரிகள் துப்புரவுத் தொழிலாளர்களை கெளரவித்துப் பாராட்டினர்.
துப்புரவுத் தொழிலாளர்களை கெளரவிப்பது என்பது தூய்மையே சேவையின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஏனெனில் அலுவலக வளாகத்திலும் வெளிப்புறப் பகுதியிலும் தூய்மையைப் பராமரிப்பது என்பது துப்புரவுத் தொழிலாளர்களின் கடுமையான முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும். அலுவலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அப்பழுக்கற்றதாகவும், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை அப்பழுக்கின்றி சுத்தமாகவும் வைத்திருப்பதற்கான கடமையை துப்புரவுத் தொழிலாளர்கள் அயராதும் நேர்மையுடனும் மேற்கொள்கிறார்கள்.
***
SMB/RS/DL
(Release ID: 2058748)
Visitor Counter : 58