சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

புதிய அரசின் முதல் 100 நாட்களில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் முக்கிய சாதனைகளை மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு எடுத்துரைத்தார்

Posted On: 25 SEP 2024 3:52PM by PIB Chennai

புதுதில்லி சி.ஜி.ஓ வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் உடனிருந்தார்.

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட 100 நாள் நிகழ்வின்  ஒரு பகுதியாக 'மக்கள் மேம்பாட்டு விழாவை'  மத்திய சிறுபான்மையினர் நலத்துறை  அமைச்சர் தொடங்கி வைத்தார். அமைச்சகத்தின் திட்டங்களையும்   சாதனைகளையும்  காட்சிப்படுத்தவும், கூட்டாளர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழான வெற்றிக் கதைகளை முன்னிலைப்படுத்தவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 2024-25 ஆம் ஆண்டில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் கடன் வழங்குவதற்கான தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் கடன் திட்டமும் அமைச்சரால் வெளியிடப்பட்டது.

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்திற்கும் இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா,  பஞ்சாப் கிராமின் வங்கி ஆகிய வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படாத பகுதிகளிலும் கடன் வழங்க இயலும்.

ஜம்மு காஷ்மீர்,  லடாக் யூனியன் பிரதேசங்களில், 2024,  ஜூலை  14 அன்று கார்கிலில் நடைபெற்ற பயனாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை  அமைச்சர்பங்கேற்றார். தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்துடன்  இணைந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நிதிக் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிதி உதவி மற்றும் ஆதரவு மூலம் சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்கும் வலுவான அர்ப்பணிப்பை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.

2024-25 நிதியாண்டில் சிந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு (சிட்கோ) ரூ.10 கோடியும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நிதிக் கழகத்திற்கு  ரூ.21.00 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஹஜ் சுவிதா செயலி அறிமுகம்:

ஹஜ்-2024 காலத்தில் ஹஜ் நிர்வாகத்தில் இது ஒரு பெரிய மாற்றம்.

பயிற்சி உள்ளடக்கம், தங்குமிடம், விமான விவரங்கள், லக்கேஜ் தகவல், அவசர ஹெல்ப்லைன், குறை தீர்த்தல்,மொழி மொழிபெயர்ப்பு, யாத்திரை தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது.

குறைகளை களைவதிலும், தகவல்களை பரப்புவதிலும், நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த தீர்வு  அமைப்பிற்கும் பெரும் உதவியாக உள்ளது.

ஆர்வமுள்ள யாத்ரீகர்களின் விண்ணப்ப செயல்முறையும் ஹஜ் -2025 க்கான செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹஜ் நிர்வாகம் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையும்  ஒத்துழைப்பையும்  மேம்படுத்த சவூதி அரேபியாவுக்கு இருதரப்புப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் மொழிக்கான பாஷினி தொழில்நுட்பம்:

சிறுபான்மையினர் நல அமைச்சகம் பாஷினி முன்முயற்சியை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (minorityaffairs.gov.in) வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது. பாஷினி தளத்தில்  இணைய மொழிபெயர்ப்பை இணைப்பதன் மூலம், அமைச்சகம் அதன் சேவைகள் மற்றும் தகவல்களுக்கு பன்மொழி அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு மொழி பின்னணியைச் சேர்ந்த மக்கள் எளிதாகப் பயணம் செய்யவும் அரசுத் திட்டங்களில் ஈடுபடவும் முடியும் என்பதை உறுதி செய்கிறது. இந்த அமலாக்கம் உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும் அனைத்து சமூகங்களுக்கும் வளங்களை சமமாக அணுகுவதை செயல்படுத்துவதற்கும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058606

***

SMB/RS/DL



(Release ID: 2058746) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi