வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

19-வது இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு அமைச்சர்கள் ஆணையக் கூட்டம்

Posted On: 25 SEP 2024 4:11PM by PIB Chennai

மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய தூதுக்குழு, அடிலெய்டுக்கு சென்று, ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் செனட்டர் டான் ஃபாரலை சந்தித்தது.

அமைச்சர் கோயல் 19-வது இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு அமைச்சர்கள் ஆணையக் கூட்டத்திற்கு, கூட்டாக தலைமை தாங்கினார். இரு நாடுகளும் கூட்டாக, இன்னும் ஆராயப்பட வேண்டிய மிகப்பெரிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.

சிட்னியில், முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா (ITTT) அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதில் இன்வெஸ்ட் இந்தியா, என்.ஐ.சி.டி.ஐ., ஏற்றுமதி மேம்பாடு மற்றும் டி.ஜி.எஃப்.டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இருப்பார்கள். இதில் தனியார் துறையும் (சிஐஐ பங்கேற்பு) அடங்கும். இந்த அலுவலகத்தின் முதன்மைப் பணி இரு தரப்பிலும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு இடையில் வர்த்தக பிரச்சினைகளை எளிதாக்குவதாகும். 2022 மே முதல் 9 முறை இரு நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை மற்றும் நட்புறவு நிலவுவதாக அவர் வலியுறுத்தினார்.

2014 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இந்தியாவில் தயாரிப்போம்' முன்முயற்சியின் 10 ஆண்டுகளைக் கொண்டாடுவது பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த முயற்சி, இந்தியாவில், உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான முழு அரசாங்க அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் இந்தியா வியத்தகு சாதனைகளை அடைந்துள்ளது. 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் "எதிர்காலத்தில் தயாரிக்கப்பட்ட ஆஸ்திரேலியா" ஆகியவை எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்று திரு கோயல் வலியுறுத்தினார்.

தீர்க்கமான தலைமை, 1.4 பில்லியன் ஆர்வமுள்ள இந்தியர்களின் கோரிக்கை, இந்தியாவின் சராசரி வயது 28.4 ஆண்டுகள் கொண்ட மக்கள் தொகைப், பங்கீடு மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து அவர் விவரித்தார்.

சேவைகள் மற்றும் இயற்கைப் பொருட்களில் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை (எம்ஆர்ஏ) உரிய நேரத்தில் இறுதி செய்வது உட்பட இசிடிஏ-ன் நிலுவையில் உள்ள பிரச்சினைகளை திரு கோயல் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையே, அதிக அளவிலான மக்கள் ஈடுபாட்டை உருவாக்குவதையும், விமானப் போக்குவரத்துத் தொடர்பை அதிகரிப்பதையும் திரு கோயல் ஒப்புக் கொண்டார்.

தொழில்முறை சேவைகளில் ஆஸ்திரேலியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அதிநவீன அறிவுடன் கூடிய ஆர்வமுள்ள மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களை இந்தியா எவ்வாறு வழங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இரு நாடுகளும் 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன. உள்நாட்டு சேவைகள் ஒழுங்குமுறை பிரச்சினை உட்பட, ஜி20, ஐபிஇஎஃப் மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அதிக ஒத்துழைப்பு குறித்தும் குழு விவாதித்தது.

இரு தரப்பிலும் உள்ள மக்கள் மற்றும் வணிகங்களுக்கான முதலீட்டை அதிகரிப்பதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிக ஓட்டத்துடன் சிஇசிஏ-ன் முடிவை விரைவுபடுத்துவதை குழு நோக்கமாகக் கொண்டது.

***

MM/KPG/KR/DL


(Release ID: 2058690) Visitor Counter : 38


Read this release in: English , Hindi , Urdu