சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 69-வது நிறுவன நாள் கொண்டாட்டங்கள் - மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை வகித்தார்

Posted On: 25 SEP 2024 2:49PM by PIB Chennai

"இந்தியாவில் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் துறையில் புதுதில்லி எய்ம்ஸ் முன்னோடியாக உள்ளது எனவும் அதன் சிறப்பான மரபு உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். புதுதில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 69-வது நிறுவன  நாள்  விழாவிற்கு  இன்று அவர் தலைமை வகித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுதில்லி  எய்ம்ஸ்  குறிப்பிடத்தக்க மைல்கற்களை  எட்டியுள்ளது என்றார்.  தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்..ஆர்.எஃப்) தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, புதுதில்லி எய்ம்ஸ் இந்தியாவின் மருத்துவ நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரப்  பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான சிறப்பு மையத்தை புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவியுள்ளது என்று திரு ஜாதவ் குறிப்பிட்டார். தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் 900-க்கும் மேற்பட்ட வெளிப்புற ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாகவும், மொத்தம் ரூ. 200 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களுக்கு எய்ம்ஸ் நிதியுதவி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். .

சுமார் ரூ.900 கோடி மதிப்பீட்டில் 2200 அறைகள் கொண்ட புதிய விடுதி வளாகத்தை கட்ட எய்ம்ஸ்  திட்டமிட்டுள்ளதாக  திரு ஜாதவ் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில், உள்நோயாளிகள் படுக்கைகள் 30% க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளன என்றும் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கிட்டத்தட்ட 40% அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வரும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் திரு பிரதாப் ராவ் ஜாஜவ் தொடங்கி வைத்துப்  பார்வையிட்டார்.

மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகளையும்  மத்திய  இணையமைச்சர்  வழங்கினார்.

பின்னணி:

1956-ல் நிறுவப்பட்ட தில்லி எய்ம்ஸ், உயர்தர மருத்துவக் கல்வியையும் விரிவான சுகாதார சேவைகளையும் வழங்குகிறது. எய்ம்ஸ் அதன் தொடக்கத்திலிருந்தே, புதுமையான மருத்துவ நடைமுறைகள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சிகளை உருவாக்குவதில் முன்னோடியாக உள்ளது.

***********

(Release ID: 2058569)
PLM/RR/KR


(Release ID: 2058615)
Read this release in: English , Urdu , Marathi , Hindi