பாதுகாப்பு அமைச்சகம்
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பாதுகாப்புத் துறைச் செயலாளர் கென்யா-வுக்குச் செல்கிறார்
प्रविष्टि तिथि:
25 SEP 2024 2:29PM by PIB Chennai
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க முயற்சியாக பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே 2024 செப்டம்பர் 26 முதல் 27 வரை கென்யாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயண த்தின் போது பாதுகாப்புத் துறைச் செயலாளர் கென்ய பாதுகாப்பு முதன்மை செயலாளருடன் கலந்துரையாடவுள்ளார் .
கென்யாவில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய சிடி ஸ்கேன் வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அவரது இந்த பயணத்தின் போது நடைபெறவுள்ளது. கென்யாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் ராணுவ மருத்துவ சேவைகளை மேம்படுத்த ஆதரவளிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது.
***
(Release ID: 2058560)
PLM/RR/KR
(रिलीज़ आईडी: 2058611)
आगंतुक पटल : 97