ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மருத்துவ ஜவுளிகளுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணை - ஜவுளி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 25 SEP 2024 1:35PM by PIB Chennai

பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல் முயற்சியாக ஜவுளி அமைச்சகம் மருத்துவ ஜவுளி தரக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்துள்ளது. தரக் கட்டுப்பாட்டு ஆணை (QCO) 2024 அக்டோபர் 1, முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒழுங்குமுறை சானிட்டரி நாப்கின்கள், குழந்தை டயப்பர்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பேட்கள் மற்றும் பல் பிப்ஸ் உள்ளிட்ட முக்கியமான மருத்துவ ஜவுளி தயாரிப்புகளுக்கான தரங்களை வரையறுக்கிறது.

 

இந்த தரக் கட்டுப்பாட்டின் கீழ் கட்டாய சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது, இந்த தயாரிப்புகள் தொடர்ந்து அத்தியாவசிய தர வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தரநிலைகளுக்கு இணங்குவது சட்டப்பூர்வமானது. இதற்கு இணங்காவிட்டால் அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறு தொழில் நிறுவனங்கள், குறிப்பாக சுய உதவிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, இந்த தரக் கட்டுப்பாட்டு தேவைகளிலிருந்து அவர்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.

 

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் அத்தியாவசிய நுகர்வோர் தயாரிப்புகளாகும், அவற்றை அப்புறப்படுத்தும் போது மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன் விளைவாக, பொது பாதுகாப்பு மற்றும் திருப்தி தொடர்பான அனைத்து கட்டாய சோதனைகளும் அவற்றின் உற்பத்தி மற்றும் இறக்குமதி செயல்முறைகளில் இணைக்கப்படுவது முக்கியம். அறிவிக்கப்பட்ட விவரக்குறிப்புகள், பி.எச் அளவுகள், சுகாதார சோதனை, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தன்மை, உயிர் இணக்கத்தன்மை மதிப்பீடுகள் மற்றும் மக்கும் தன்மை போன்ற முக்கியமான செயல்திறன் அளவுகோல்களை உள்ளடக்கியது. குறிப்பாக, குழந்தைகளுக்கான டயப்பர்களில் உள்ள பித்தலேட் அளவைப் பரிசோதிப்பதில் வலுவான முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் இந்த ரசாயனங்கள் பயனர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.

 

தரக்கட்டுப்பாட்டை செயல்படுத்துவது அத்தியாவசிய நுகர்வோர் தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் விரிவான உத்தியின் ஒரு பகுதியாகும்.

***

(Release ID: 2058537)
PLM/RR/KR



(Release ID: 2058555) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Punjabi