ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கிராமப்புறங்களில் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு சட்ட உதவி – தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 25 SEP 2024 12:26PM by PIB Chennai

கிராமப்புற பகுதிகளில் சட்ட விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், லாப நோக்கற்ற அமைப்பான சாக்ஷி தன்னார்வ தொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டார்.

 

தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின்  தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெண்களுக்கு சட்ட ரீதியான தீர்வுகள் வழங்கப்படுவது மகளிர் உரிமைகளை வலுப்படுத்தும் என்று ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் கூறியுள்ளார்.

 

சாக்ஷி என்பது சட்ட ஆலோசனை, கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.

***

(Release ID: 2058490)
PLM/RR/KR



(Release ID: 2058539) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi