சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஒரு லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள் என்ற இலக்கை தேசிய மருத்துவ ஆணையம் ஓராண்டுக்கு முன்பே எட்டிவிட்டது: மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா

Posted On: 24 SEP 2024 6:45PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் 4-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான இடங்களை அதிகரித்ததற்காக இந்த ஆணையத்தை பாராட்டினார். நாட்டில் ஒரு லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள் என்ற இலக்கை ஆணையம் ஓராண்டுக்கு முன்பே எட்டிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கும் அவர் ஊக்கமளித்தார்.

தெரிவு செய்யப்பட்ட 89  கட்டுரைகளின் தொகுப்பான ‘குடும்ப மருத்துவரை உருவாக்குதல்: வேர்களை அடைதல்’ என்ற நூலினையும் கல்லூரிகளால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் முதலாவது ஆய்வறிக்கையையும் அமைச்சர்  திரு நட்டா வெளியிட்டார். சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவர்களை அவர் பாராட்டினார்.  நாடு முழுவதும் புதிதாக எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058329

***

SMB/RS/DL



(Release ID: 2058373) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi