மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு 2023-க்கான ரிசர்வ் பட்டியல் அறிவிப்பு

Posted On: 24 SEP 2024 5:01PM by PIB Chennai

ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு, 2023 இன் முடிவு 12.01.2024 தேதியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் 258 தேர்வர்களை நியமனத்திற்கான தகுதி வரிசையில் பரிந்துரைக்கிறது.

 

ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு, 2023-ன் விதி 16 (iv) & (v) இன் படி, கடைசியாக பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களுக்கு கீழே தகுதி வரிசையில் ஒருங்கிணைந்த ரிசர்வ் பட்டியலையும் தேர்வாணையம் பராமரித்தது.

 

இப்போது சுரங்க அமைச்சகத்தின் வேண்டுகோளின்படி, ரிசர்வ் பட்டியலில் உள்ள தேர்வர்களிடமிருந்து, 5 பிரிவுகளில் 6 பேரை தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுரங்க அமைச்சகம் இந்த பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்.

 

***


(Release ID: 2058310)
Read this release in: English , Urdu , Hindi