ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'தூய்மையே சேவை 2024' திட்டத்தின் கீழ், விரிவான தூய்மை மற்றும் சுகாதார இயக்கத்தை ஜவுளி அமைச்சகம் நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2024 3:27PM by PIB Chennai

ஜவுளி அமைச்சகம், அதன் பல்வேறு துணை அலுவலகங்கள், இணைக்கப்பட்ட மற்றும் தன்னாட்சி அமைப்புகள் மூலம், தூய்மையே சேவை 2024' இயக்கத்தை கடைபிடிக்கிறது. தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட நாடு தழுவிய தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.

இந்திய சணல் கழகம்

நாகோனில் உள்ள இந்திய சணல் கழகம் பிராந்திய அலுவலகம் நாகோன் நகராட்சி வாரியத்தின் தூய்மை  பணியாளர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்து முன்னிலை வகித்தது. அன்றாட வாழ்க்கையில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதில் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, தூய்மைப் பணி தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தேசிய ஆடை வடிவமைப்பு மையம், (என்.ஐ.எஃப்.டி)

என்.ஐ.எஃப்.டி வளாகங்களில், தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தெரு நாடகங்கள், மற்றும் காட்சி தயாரிப்புப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த முயற்சிகள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இருவரையும் தூய்மையான, பசுமையான இந்தியாவை நோக்கி உறுதியான நடவடிக்கை எடுக்க ஊக்கமளித்தன.

ஜவுளி அமைச்சகத்தின் தலைமையகம்

ஜவுளி அமைச்சகத்தின் தலைமையகத்தில், "தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு நிகழ்வு" என்ற கருப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பணியிடங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதில் இன்றியமையாத பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதால், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் தூய்மை பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

ஜவுளிக் குழு

ஜவுளிக் குழு அதன் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் இணைய சுகாதார இயக்கத்தைத் தொடங்கியது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவப்பட்டது, மேலும் இணைய சுகாதாரம் குறித்து ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காக விழிப்புணர்வு பயிலரங்குகள் நடத்தப்பட்டன. உயர் அதிகாரிகளும் பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளை ஆய்வு செய்து, பணியிடத்தின் தூய்மை மற்றும் அழகுபடுத்தலை உறுதி செய்தனர். இந்த முயற்சி அலுவலக இட நிர்வாகத்தை மேம்படுத்துவதையும், சிறந்த இணைய பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

***

IR/KPG/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2058289) வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , हिन्दी , Punjabi