தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தின் 100 நாட்களில் தொலைத் தொடர்புத் துறையின் முக்கிய முடிவுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா விளக்கம்
Posted On:
23 SEP 2024 5:53PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அரசு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்னுரிமை அளித்து வருவதாக தொலைத் தொடர்புத் துறை மற்றும் தபால் துறை மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். தொலைத் தொடர்புத் துறையின் முன்முயற்சிகள் டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புகள் எங்கும் நிறைந்திருப்பதை உறுதி செய்வதையும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் வாய்ப்புகளை அணுகுவதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். இந்தியா முழுவதும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கு, இந்த இணைப்பை பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் ஆகியோர் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் சாதனைகள் குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் உரையாற்றினர்.
குடிமக்கள் தங்கள் தாயின் நினைவாக ஒரு மரத்தை நட்டு, அர்ப்பணிக்கப்பட்ட மரத்தின் இருப்பிடம், அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் நேர முத்திரையை பதிவு செய்யும் ‘தாயின் பெயரில் மரம்’ செயலியையும் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு புதிய படத்தைப் பதிவேற்றுவதன் மூலம் மரத்தின் வளர்ச்சியைப் புதுப்பிக்க செயலி அனுமதிக்கிறது, இது தொடர்ச்சியான கண்காணிப்பை அனுமதிக்கிறது. (ஆண்ட்ராய்டு செயலியை https://usof.gov.in/en/ek-ped-maa-ke-naam என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்)
அரசின் முதல் 100 நாட்களில் தகவல் தொடர்புத் துறையின் சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர் திரு சிந்தியா, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விரிவான விளக்கங்களை அளித்தார். இந்திய அரசின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக தொலைத் தொடர்புத் துறை பல முக்கிய முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொலைத் தொடர்புத் துறை,100 நாள் சாதனைகள் மூலம், இந்தியாவின் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், தடையற்ற இணைப்பை உறுதி செய்தல், டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற எதிர்காலத்திற்கு நாட்டைத் தயார்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057958
***
BR/RR
(Release ID: 2058163)
Visitor Counter : 35