புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மும்பையில் பொருளாதார நிபுணர்களுடனான கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
24 SEP 2024 11:51AM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2024 செப்டம்பர் 24 அன்று மும்பையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் கணிப்பாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் குறியீடுகளை மேலும் வலுவானதாகவும், சிறப்பானதாகவும் மாற்றுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் குறியீட்டு தரவுகளை தீவிரமாகப் பயன்படுத்தும் கணிப்பாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களிடமிருந்து பின்னூட்டம் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். இந்தக் கலந்துரையாடல், இரண்டு குறியீடுகளின் அடிப்படை திருத்த நடவடிக்கையின் போது சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் உத்தேச மேம்பாடுகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ள மத்திய திட்ட செயலாக்க அமைச்சகத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கும். இது பங்குதாரர்களிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலை தொடர்பான நிபுணத்துவ பகிர்வு மற்றும் கருத்துக்கள் / நுண்ணறிவு பரிமாற்றத்திற்கு ஊக்கமளிக்கும்.
இந்தப் பின்னணியில், மத்திய உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் கணிப்பாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடனான கலந்துரையாடல், இந்தக் குறியீடுகளின் வழிமுறைகளின் பல்வேறு அம்சங்களை தரவு ஆதாரங்களுடன் விவாதிப்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
***
(Release ID: 2058142)
PKV/RR
(रिलीज़ आईडी: 2058158)
आगंतुक पटल : 93