நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, சுகாதார பரிசோதனைகள், வாக்கியம் எழுதுதல் மற்றும் ஓவியப் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் 'தூய்மையே சேவை -2024' இயக்கத்தைத் தொடர்கிறது
Posted On:
23 SEP 2024 6:56PM by PIB Chennai
7-வது நாளாக, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, தூய்மையே சேவை இயக்கம் 2024-யை தொடர்கிறது. நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் அதன் துணை / தன்னாட்சி / சட்டரீதியான அமைப்புகளில் இன்று பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன.
நொய்டாவில் இன்று தரநிலைப்படுத்தலுக்கான தேசிய பயிற்சி நிறுவனம் (என்ஐடிஎஸ்) தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு நிகழ்ச்சியில், இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நலவாழ்வு முகாம்களை நடத்தியது. இதில் சுமார் 70 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பிஎல் வர்மா, தொடங்கி வைத்தார். தமது தொடக்க உரையில், நமது அன்றாட வாழ்வில் தூய்மையின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். தூய்மையை நமது பண்பு மற்றும் நமது அன்றாட கலாச்சாரத்தின் அடிப்படை பகுதியாக வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நொய்டாவில் உள்ள என்ஐடிஎஸ் வளாகத்தில் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" இயக்கத்தின் கீழ் ஒரு மரத்தை நட்டு, பிஐஎஸ் மற்றும் துறையின் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இணையமைச்சர் வழங்கினார்.
***
IR/AG/DL
(Release ID: 2058024)
Visitor Counter : 38