இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், மும்பை வளாகத்தில் உள்ள என்எம்ஐஎம்எஸ் பல்கலைக்கழகத்தில் மகாராஷ்டிரா அத்தியாயமான “வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இளையோர் சக்தி”யை தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
23 SEP 2024 3:43PM by PIB Chennai
"இந்த மாற்றத்தக்க சகாப்தத்தின் பலன்களை அனுபவிக்க நமது 'அமிர்த தலைமுறை' தயாராக இருப்பதை அரசு உறுதி செய்கிறது. தரமான கல்வி, திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோர் லட்சியங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், நாளைய முற்போக்கான இந்தியாவைக் கட்டியெழுப்ப இன்றைய இளைஞர்களை அரசாங்கம் தயார்படுத்துகிறது” என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறினார். இன்று மும்பையில் உள்ள ஸ்ரீ வில் பார்லே கெலவாணி மண்டல் நர்சி மோஞ்சி மேலாண்மை மைய கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளையோர் சக்தியில் மாணவர்களிடம் உரையாற்றினார்.
இளைஞர் சக்தி மற்றும் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் பார்வையில் அதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். “இந்தியாவின் இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், உறுதியானவர்களாகவும் உள்ளனர், மேலும், இந்தியாவின் உலகளாவிய தலைவராக மாறுவதற்கான பாதை அவர்களிடம் உள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பருவநிலையை எதிர்க்கும் தன்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதில் இளையோர் சக்தி தலைமை தாங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் நிலையான எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் சக்தி வாய்ந்த சக்தியாக இளைஞர் ஆற்றலை மாற்றுவதே அரசின் குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களின் இன்றியமையாத முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் பேசினார். பொருளாதார சூழலை மாற்றுவதையும் பல்வேறு துறைகளில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
2070-ம் ஆண்டுக்குள் கார்பன் வாயு உமிழ்வு இல்லாத நிலை என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த அமைச்சர், கார்பன் தடயங்களைக் குறைக்கும் மற்றும் சிறந்த சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். குடிமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, பொறுப்பான நுகர்வு மற்றும் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஈடுபாடு இன்றியமையாததாக இருப்பதால், நிலையான நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்குமாறு அவர் ஊக்குவித்தார்.
***
IR/AG/DL
(रिलीज़ आईडी: 2057994)
आगंतुक पटल : 67