சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை 2024 இயக்கம் மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார்   விசாகப்பட்டினத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு வாகன சேவையைத் தொடங்கிவைத்தார் 

Posted On: 20 SEP 2024 7:14PM by PIB Chennai

மத்திய அரசு பழக்கவழக்க தூய்மை- கலாச்சார தூய்மை என்ற கருப்பொருளுடன் தூய்மையே சேவை-2024 இயக்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், அன்றாட வாழ்க்கையில் தூய்மையை ஒருங்கிணைக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது 
இந்த இலக்கைத் தொடர்ந்து, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், 19 செப்டம்பர் 2024 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்தின் கீழ், துப்புரவு பணியாளர்களால் வாங்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு வாகனங்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் நீண்டகால பணி ஒப்பந்தம் செய்து கொள்ளும் தூய்மை கர்மிகளுக்கு இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு உபகரணங்கள் / வாகனங்களை வாங்கி அவர்களை தூய்மை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு மூலதன மானியம் வழங்குவது நமஸ்தே திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், விசாகப்பட்டினத்தில் அடையாளம் காணப்பட்ட இலக்கு குழுக்களுக்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ரூ.2.29 கோடி மதிப்புள்ள மூலதன மானியத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் 75 பயனாளிகளுக்கு ரூ.5.39 கோடி மதிப்பிலான 15 இயந்திர துப்புரவு இயந்திரங்கள் / வாகனங்கள் வாங்க இயலும். இதில், விசாகப்பட்டினம் நகர் நிகாமுடன் ஒப்பந்தம் செய்துள்ள 50 துப்புரவு பணியாளர்கள் ஏற்கனவே 10 வாகனங்களை வாங்கியுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வீரேந்திர குமார், துப்புரவு தொழிலாளர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் சுயமரியாதையையும் பாதுகாப்பதில் நமஸ்தே திட்டம் பெரும் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 46,035 கழிவுநீர் செப்டிக் டேங்க் தொழிலாளர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சுமார் 3,498 தொழிலாளர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு சாதனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 3,617 தொழிலாளர்கள் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விசாகப்பட்டினம் நகர் நிகாம், மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


*************


MM/AG/KV


(Release ID: 2057190) Visitor Counter : 62


Read this release in: English , Urdu , Hindi