இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கத்தில் மை பாரத் தள தன்னார்வலர்கள் தீவிர பங்கேற்பு
Posted On:
20 SEP 2024 5:10PM by PIB Chennai
2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும் இந்த ஆண்டின் தூய்மை சேவை இயக்கத்தில் பங்கேற்பதில் இளைஞர் நலத் துறை முன்னிலை வகிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள இளைஞர் தன்னார்வலர்கள், மை பாரத் தள முன்முயற்சியின் கீழ், தூய்மையை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய முயற்சியை வழிநடத்துகின்றனர்.
2024 செப்டம்பர் 19 நிலவரப்படி, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மை பாரத் தள இளைஞர் தன்னார்வலர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 12 லட்சம் கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த இயக்கத்தின் கீழ், 7,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள், 2,000 சமூக மையங்கள், 450 அமிர்த நீர் நிலைகள் மற்றும் பிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தூய்மை செய்யப்பட்டுள்ளன. இது கூட்டு நடவடிக்கையின் சக்தியை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தில், இளைஞர் தன்னார்வலர்கள் விரிவான தூய்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை அகற்றுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் உள்ள நிறுவன வளாகங்கள், தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், பாரம்பரிய தலங்கள் போன்ற பொது இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057048
***************
PLM/RS/KV
(Release ID: 2057128)
Visitor Counter : 65