தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகம் தீவிர பங்கேற்பு
प्रविष्टि तिथि:
20 SEP 2024 5:01PM by PIB Chennai
தொலைத் தொடர்புத் துறை, தூய்மையையும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் ஊக்குவிப்பதன் மூலம் தூய்மையே சேவை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா நேற்று (19.09.2024) மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அச்லேஷ்வரில் உள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 'தூய்மை உறுதிமொழி' ஏற்றுவைத்தார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ், மரக்கன்றையும் அவர் நட்டார்.
பொதுமக்களின் முனைப்பான பங்கேற்பின் மூலம் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் இத்துறை உறுதிபூண்டுள்ளது.
தூய்மை சேவை இயக்கத்தின் கீழ், தொலைத்தொடர்பு அமைச்சத்தின் பணிகளை பின்வரும் சமூக வலைதள இணைப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
எக்ஸ் - https://x.com/DoT_India
இன்ஸ்டா- https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ=
பேஸ்புக் - https://www.facebook.com/DoTIndia
யூடியூப்- https://www.youtube.com/@departmentoftelecom]
-------------
PLM/RS/KV
(रिलीज़ आईडी: 2057121)
आगंतुक पटल : 97