எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

 தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகள் – 2024-க்கான விண்ணப்பங்களை எஃகு அமைச்சகம் வரவேற்கிறது 

Posted On: 20 SEP 2024 1:50PM by PIB Chennai

மத்திய அரசின் எஃகு அமைச்சகம், உலோகவியல் துறையில் செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகள் (NMA) -2024 க்கான விண்ணப்பங்களை, தொழில்துறை, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து வரவேற்கிறது.

கீழ்க்கண்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்:-
வாழ்நாள் சாதனையாளர் விருது
தேசிய உலோகவியலாளர் விருது
இளம் உலோகவியலாளர் விருது
சூழல்
உலோக அறிவியல்
இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது.
https://awards.steel.gov.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும். NMA 2024க்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான காலஅவகாசம் அக்டோபர் 17, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

NMA 2024-க்கான சாளரத்தை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பின் நகலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகள் தொடர்பான தகுதிகள் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான வழிகாட்டுதல்கள்https://awards.steel.gov.in 
இந்தத் திட்டம், தொழில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது கல்வியில் தங்கள் பணி மூலம் இந்தியாவில் உலோகவியல் துறையில் பங்களித்த இந்திய குடிமக்களுக்கு மட்டுமே. விண்ணப்பதாரர்களின் தகுதி 01/01/2024 முதல் பரிசீலிக்கப்படும்.

 

**************

MM/AG/KV



(Release ID: 2057078) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi