சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பழங்குடியினர் பகுதிகளில் உள்ளூர் சுற்றுலா மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1000 பழங்குடியினர் தங்கும் இல்லங்கள் மேம்படுத்தப்படும்

Posted On: 19 SEP 2024 4:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் 2024 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு செறிவூட்டப்பட்ட பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: ரூ.56,333 கோடி மற்றும் மாநில அரசு: ரூ.22,823 கோடி) பிரதமரின் பழங்குடியினர் உன்னத கிராமம் இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது சுமார் 63,000 கிராமங்களை உள்ளடக்கி, 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். இது 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 வட்டாரங்களை உள்ளடக்கும்.

 

இந்த இயக்கம் 25 தலையீடுகள் / திட்டங்களை உள்ளடக்கியது, அவை 17-வரிசை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு அமைச்சகமும் / துறையும் அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் (டிஏபிஎஸ்டி) கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் இது தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்பேற்கும்.

 

இந்த இயக்கத்தின் திட்டங்களில் ஒன்று சுற்றுலா அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பழங்குடியினர் இல்லங்களில் தங்கும் வசதி-ஸ்வதேஷ் தர்ஷன் ஆகும். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள சுற்றுலா வளங்களை முழுமையாக்கும் வகையிலும், பழங்குடியின மக்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை வழங்கவும், சுற்றுலா அமைச்சகம் மூலம் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 1000 வீடுகள் மேம்படுத்தப்படும். சுற்றுலா வசதி உள்ள கிராமங்களில், பழங்குடியின குடும்பங்கள் மற்றும் கிராமத்தில் ஒரு கிராமத்தில் 5-10 தங்கும் இல்லங்கள் கட்டுவதற்கு நிதி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் இரண்டு புதிய அறைகள் கட்ட ரூ.5.00 லட்சமும், தற்போதுள்ள அறைகளை புதுப்பிக்க ரூ.3.00 லட்சமும், கிராம சமுதாய தேவைகளுக்கு ரூ.5 லட்சமும் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பழங்குடியின மக்கள் தொகை 10.45 கோடியாக உள்ளது. மேலும் 705-க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன, தொலைதூரங்களிலும், அடைவதற்கு கடினமான பகுதிகளிலும் அவர்கள் வசிக்கின்றனர். பிரதமரின் பழங்குடியினர் உன்னத கிராம இயக்கம், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை ஒருங்கிணைப்பு மற்றும் பரவல் மூலம் செறிவூட்டவும், பழங்குடியினர் பகுதிகள் மற்றும் சமூகங்களின் முழுமையான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பழங்குடி கிராமங்கள், பிரதமர் விரைவு சக்தி தளத்தில் சம்பந்தப்பட்ட துறையால் அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளுடன் வரைபடமாக்கப்படும். பிரதமர் விரைவு சக்தி தளத்தில் நிதி முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

 

***

(Release ID: 2056682)
PKV/RR/KR



(Release ID: 2056893) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi , Malayalam