நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நுகர்வோர் விவகாரங்கள் துறை, தூய்மையே சேவை பிரச்சாரத்தின் 3 வது நாளில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது

Posted On: 20 SEP 2024 10:17AM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, அதன் பல்வேறு துணை அலுவலகங்கள் மூலம், தூய்மையே சேவை இயக்கம் 2024-ன் 3 வது நாளை இன்று கடைபிடித்தது. நாடு முழுவதும் சவாலான மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழிவுப் பகுதிகளை நிவர்த்தி செய்ய பெரிய அளவிலான தூய்மை இயக்கங்களில் கவனம் செலுத்தி, பரவலான பங்கேற்பை உருவாக்குவதை இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் துப்புரவு நடவடிக்கைகளை வாரணாசியில் இணைக்கப்பட்ட அலுவலகம் அதன் அலுவலக வழித்தடங்களை சுத்தம் செய்தது. தன்னாட்சி அமைப்பான அகமதாபாத் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் உள்ள மண்டல தர ஆய்வகங்களின் (ஆர்ஆர்எஸ்எல்) அலுவலக வளாகத்தின் நடைபாதையை சுத்தம் செய்தன. மேலும், நாக்பூர், பெங்களூரு, ஆர்.ஆர்.எஸ்.எல், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்தன.

 

வாசகம் எழுதுதல்: வாரணாசியில் உள்ள தேசிய டெஸ்ட் ஹவுஸ், எஸ்எச்எஸ் பிரச்சாரத்திற்காக அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் இன்று வாசகம் எழுதும் போட்டியை நடத்தியது. பணியிடத்தில் ஊழியர்களின் ஈடுபாடு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கான தேசிய டெஸ்ட் ஹவுஸின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2056855)
PKV/RR/KR



(Release ID: 2056875) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Marathi