பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சகங்கள், துறைகளால் 2024, செப்டம்பர் 1 முதல் 18 வரை 67,688 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது
प्रविष्टि तिथि:
19 SEP 2024 4:01PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2024 செப்டம்பர் 1 முதல்18 வரை தீர்வு காணப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 67,688 குறைகளுக்கு மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
2024 செப்டம்பர் 1 முதல் 18 வரையிலான காலகட்டத்தில் குறைகளுக்கு தீர்வு கண்ட மத்திய அரசின் முதல் 5 அமைச்சகங்கள் துறைகள் பின்வருமாறு:
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் 10,148 குறைகளுக்கும், நிதிச்சேவைத் துறை (வங்கிப்பிரிவு) 6,605 குறைகளுக்கும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 5, 158 குறைகளுக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3, 239 குறைகளுக்கும், ரயில்வே அமைச்சகம் (ரயில்வே வாரியம்) சார்பில் 3, 116 குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056648
***
IR/RS/KR
(रिलीज़ आईडी: 2056689)
आगंतुक पटल : 76