அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆர், ஏ.பி.சி.டி.டி- யு.என் இ.எஸ்.சி.ஏ.பி மற்றும் டபிள்யு.ஏ.ஐ.டி.ஆர்.ஓஆகியவை கூட்டாக தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கை விவாதங்கள் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன
Posted On:
18 SEP 2024 3:34PM by PIB Chennai
ஏ.பி.சி.டி.டி- யு.என் இ.எஸ்.சி.ஏ.பி (தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ஆசிய மற்றும் பசிபிக் மையம்) மற்றும் டபிள்யு.ஏ.ஐ.டி.ஆர்.ஓ(தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான உலக சங்கம்) ஆகியவற்றுடன் இணைந்து சி.எஸ்.ஐ.ஆர், 11 செப்டம்பர் 2024 அன்று இணைய வழியில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கை விவாதங்கள் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த திட்டம் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்-சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் இயக்குநரகத்துடன் இணைந்து தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பல உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தென் நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள் கலந்து கொண்டனர். நிலையான வளர்ச்சி இலக்குகளை, குறிப்பாக இலக்கு 5 (பாலின சமத்துவம் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்) மற்றும் 17 (நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான கூட்டாண்மை) ஆகியவற்றை அடைவதற்கான அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான பொறுப்பான நிர்வாகத்தை தென் நாடுகள் எவ்வாறு கூட்டுறவு கூட்டாண்மை மூலம் உருவாக்க முடியும் என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சவால்களை எவ்வாறு திறம்பட எதிர்கொள்ள முடியும் என்பதையும், தெற்கு-தெற்கு இணைப்பு தனிப்பட்ட நாடுகளின் தற்போதைய முயற்சிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் தீர்மானிக்க தென் நாடுகளுக்கிடையேயான சாத்தியமான கூட்டாண்மைகள் மற்றும் உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. தொடக்க அமர்வைத் தொடர்ந்து நடந்த இந்த மாநாட்டில், மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் இருந்தன.அமர்வு 1 'ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான பொறுப்பான ஆளுகை' என்ற தலைப்பிலும்,அமர்வு2'பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அறிவியலில் உள்ளடக்கம்' என்ற தலைப்பிலும், அமர்வு 3'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான நிதி வழிமுறைகள் மற்றும் திறன் மேம்பாடு' என்ற தலைப்பிலும் விவாதிக்கப்பட்டது.
தொடக்க விழாவில், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், மாநாட்டின் விரிவான கண்ணோட்டத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டார். அறிவியல், திறந்த அறிவியல், வளங்களை அணுகுதல், பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் பொறுப்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும் புதிய மாதிரிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056010
BR/KR
***
(Release ID: 2056510)
Visitor Counter : 30