சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் 2024, செப்டம்பர் 19 அன்று விசாகப்பட்டினத்தில் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல்' இயக்கத்தின் அம்சமான 19-வது திவ்ய கலா திருவிழாவை தொடங்கி வைக்கிறார்
Posted On:
18 SEP 2024 6:09PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், விசாகப்பட்டினத்தில் நாளை, 19-வது திவ்ய கலா திருவிழாவை தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை இந்த திவ்ய கலா திருவிழாவுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திருவிழா 2024 செப்டம்பர் 19 முதல் 29 வரை, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை காட்சிப்படுத்தும். ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புமிக்க தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள், கைத்தறி, எம்பிராய்டரி வேலைகள் மற்றும் பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படுவதால் இந்த நிகழ்வு பார்வையாளர்களுக்கு ஒரு பரவசமூட்டும் அனுபவத்தை வழங்கும்.
சுமார் 20 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100 மாற்றுத் திறனாளி கைவினைஞர்கள் கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகள் மற்றும் திறன்களை காட்சிப்படுத்த உள்ளனர். வீட்டு அலங்காரம், ஆடை, எழுதுபொருள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள், பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் கரிம பொருட்கள், பொம்மைகள் & பரிசுகள் இடம் பெறும்.
விசாகப்பட்டினத்தில் 11 நாட்கள் நடைபெறும் 'திவ்ய கலா திருவிழா' காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இடம் பெறும்.
---
IR/KPG/DL
(Release ID: 2056338)