ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நீடித்த நீர் மேலாண்மையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளன

Posted On: 18 SEP 2024 3:49PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற 8-வது இந்திய தண்ணீர் வார விழாவையொட்டி நடைபெற்ற 6-வது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா தண்ணீர் அமைப்பில் நீடித்த நீர் மேலாண்மையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டன. நீடித்த முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஆற்றுப்படுகை மேலாண்மையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருதரப்பும் உறுதியளித்தன. விக்டோரியா ஏரி மற்றும் தங்கனீக்கா ஏரி போன்ற கிழக்கு ஆப்பிரிக்காவின் நீர்நிலைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பை இந்த மன்றம் ஆராய்ந்தது.

2016-ல் நிறுவப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நீர் கூட்டாண்மை, நீர் மேலாண்மையில் தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் கொள்கை கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆற்றுப் படுகை மேலாண்மை, பருவநிலை மீட்சி, நகர்ப்புற வெள்ளம், நீர் நிர்வாகம் போன்ற முக்கிய பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும், தபி மற்றும் ராம்கங்கா ஆற்றுப் படுகைகளில் நதி மேலாண்மையில் ஒத்துழைக்கின்றன. மூன்றாம் கட்டத்தின் கீழ், கூட்டாண்மை தனது முயற்சிகளை பிரம்மபுத்திரா போன்ற பிற முக்கிய ஆற்றுப் படுகைகளுக்கும் விரிவுபடுத்தும். இரு பிராந்தியங்களும் கூட்டாக 7 ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நீர் திட்டங்களுக்கு 37.4 மில்லியன் ஈரோ (ஐரோப்பிய  ஒன்றியம்  23.4 மில்லியன் ஈரோ +  இந்திய 14 மில்லியன் ஈரோ) நிதியளித்துள்ளன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிலிருந்து 743 பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்தத் திட்டங்கள் குடிநீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

---

IR/KPG/DL



(Release ID: 2056318) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi