அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்திய விவசாயிகளுக்கு பூச்சிகளை எதிர்த்துப் போராட உதவுதல்: ஒரு நிலையான பூச்சி கட்டுப்பாட்டு பெரோமோன் டிஸ்பென்சரை சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கை

Posted On: 18 SEP 2024 2:19PM by PIB Chennai

கட்டுப்படுத்தப்பட்ட விகிதத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையான பெரோமோன் டிஸ்பென்சர் பூச்சி கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் செலவுகளைக் குறைக்கும்.

பூச்சி கட்டுப்பாடு விவசாயத்தின் இன்றியமையாத பகுதியாகும். ஏனெனில் பூச்சிகள், பிற ஒட்டுண்ணிகள் தடுக்கப்படாமல் இருந்தால் நல்ல பயிரை விரைவாக அவை அழிக்கும்.

சமீபத்திய கூட்டு ஆராய்ச்சி திட்டத்தில்,பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையமான ஜேஎன்சிஏஎஸ்ஆர்-ரும் (JNCASR - இது இந்திய அரசின் அறிவியல்- தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனம்), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள தேசிய வேளாண் பூச்சிகள் மையமும் (ICAR-NBAIR) இணைந்து ஒரு நிலையான பெரோமோன் டிஸ்பென்சரை உருவாக்கியுள்ளன.

இது பூச்சி கட்டுப்பாட்டில் செலவுகளை கணிசமாகக் குறைக்க ஒரு புதுமையான தீர்வாக செயல்படும். இப்போது, அவர்கள் ஆய்வகத்தில் தங்கள் முயற்சிகளை தொழில்துறை உற்பத்திக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் நேரடியாக பெரிய அளவில் பயனடைய முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2055952

***

PLM/AG/DL


(Release ID: 2056163)
Read this release in: English , Urdu , Hindi , Telugu