அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

புதிய காகித அடிப்படையிலான சாதனம், மாசு உணர்தலை எளிதாக்கும்

Posted On: 18 SEP 2024 2:22PM by PIB Chennai

காகித அடிப்படையிலான சாதனங்களை உருவாக்குவதற்கான ஒரு புதுமையான மற்றும் செலவு குறைந்த நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுசிறப்பு உபகரணங்கள், நிபுணத்துவம் தேவைப்படும் வழக்கமான உணர்திறன் முறைகளுக்கான நடைமுறை மாற்று அமைப்பை வழங்குகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், காகித அடிப்படையிலான சாதனங்கள் எளிமை, செலவு குறைவு, செயல்திறன், சிறந்த இயக்கம் போன்ற காரணிகளின் காரணமாக நம்பிக்கைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளன. இன்க்ஜெட் அச்சிடுதல், மெழுகு அச்சிடுதல், லேசர் சிகிச்சை, திருத்தம் பேனாக்கள் போன்ற காகித அடிப்படையிலான சாதனங்களை உருவாக்க பல்வேறு முறைகள் உள்ளன.

மொஹாலியில் உள்ள நானோ அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் (.என்.எஸ்.டி) டாக்டர் பானு பிரகாஷ் தலைமையிலான ஆராய்ச்சி குழு, பிஏபி பேனாவைப் பயன்படுத்தி ஒரு புதிய ஃபேப்ரிகேஷன் நுட்பத்தை ஆராய்ந்தது. இதற்கு எந்த இயந்திரங்களும் அல்லது வெப்பமூட்டும் / உலர்த்தும் படிகளும் தேவையில்லை. இது டிஐஒய் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

இதைப் பயன்படுத்தி, ஹெவி மெட்டல் மற்றும் நைட்ரைட்டை வேதியியல் ரீதியாக கண்டறிவதற்கான இரு பரிமாண (2D) காகித அடிப்படையிலான சாதனங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். டோபமைனைக் கண்டறிவதற்கான 2 டி பக்கவாட்டு ஓட்ட காகித அடிப்படையிலான சாதனங்களைப் பயன்படுத்தி உயிரியல் உணர்திறனுக்கான புனை நுட்பத்தின் பல்துறை திறனையும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2055953

***

PLM/AG/DL



(Release ID: 2056153) Visitor Counter : 17


Read this release in: English , Hindi , Telugu