பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரங்கா மலை மீட்பு அமைப்புடன் இந்திய இராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 18 SEP 2024 2:48PM by PIB Chennai

ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில், இந்திய ராணுவம் இன்று தில்லி கண்டோன்மெண்டில் திரங்கா மலை மீட்பு அமைப்புடன் (டி.எம்.ஆர்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ராணுவம் சார்பில் ராணுவ நடவடிக்கைகளுக்கான கூடுதல் தலைமை இயக்குநர், மேஜர் ஜெனரல் மணீஷ் லுத்ரா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இந்திய ராணுவத்தின் மீட்பு மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஒரு முக்கிய படியாகும். பனிச்சரிவு மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை திறன்களின் வீர்ர்களுக்கு வழிகாட்டும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ராணுவ பயிற்றுவிப்பாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை நடத்துவதில் திரங்கா மாலை மீட்பு அமைப்பின் இந்திய ராணுவத்துடன் ஒத்துழைக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

ஜெனரல் உபேந்திர திவேதி திரங்கா மலை மீட்பு அமைப்பின் முயற்சிகளைப் பாராட்டினார் இந்திய இராணுவத்திற்கும் டி.எம்.ஆருக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பாராட்டினார். டி.எம்.ஆரின் மீட்புக் குழுவின் இரண்டு குழு உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு அட்டைகளை வழங்கியதன் மூலம் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு அமைப்புகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்று ராணுவ துணைத் தளபதி (வியூகம்) லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் ஐச் பாராட்டினார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பயிற்சி மற்றும் மீட்பு முயற்சிகளில் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதன் மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றுவதில் டி.எம்.ஆர் மகத்தான சேவையைச் செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

----

(Release ID 2055960)

IR/KPG/KR



(Release ID: 2056049) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi