திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
சிறப்பு பிரச்சாரம் 4.0 மூலம் தூய்மையை நிறுவனமயமாக்குகிறது
Posted On:
18 SEP 2024 2:00PM by PIB Chennai
தூய்மை மற்றும் அரசில் நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைப்பதை மையமாகக் கொண்டு 2024 அக்டோபர் 2முதல்அக்டோபர் 31வரைசிறப்பு இயக்கம் 4.0-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பு இயக்கம் 4.0 நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் (DARPG) கீழ் உள்ள அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அவற்றின் துணை அலுவலகங்களுக்கு கூடுதலாக கள / வெளியூர் அலுவலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) இயக்க இடங்களை இறுதி செய்தல், நோடல் அதிகாரிகளை உணர்த்துதல், அடையாளம் காணப்பட்ட பிரிவுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் காணுதல், அகற்றுதல் மற்றும் வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி பதிவு மேலாண்மை உள்ளிட்ட தூய்மையை நிறுவனமயமாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. களப் பணியாளர்களுடன் தீவிர ஈடுபாடு மற்றும் பிரச்சாரத்தை நெருக்கமாக கண்காணிப்பதன் மூலம், திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (MSDE) மேற்கொண்டுள்ளது.
சிறப்பு இயக்கம் 3.0-ன் முன்னேற்றத்தின் போது, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் 2305 பொது குறைகளை விடாமுயற்சியுடன் தீர்த்தது மற்றும் சுமார் 2,000 தூய்மை இயக்கங்களை நடத்தியது, இது பொதுமக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு செயலூக்கமான அணுகுமுறையைக் குறிக்கிறது. நிர்வாகத் திறனின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, திறன் மேம்பாட்டு அமைச்சகம் முறையாக இ-அலுவலகம் மற்றும் காகிதமில்லா அலுவலகத்தை நோக்கி முன்னேறியது. இந்த அமைச்சகம் சுமார் 175 மின்-கோப்புகளை மதிப்பாய்வு செய்து சிறப்பு பிரச்சாரத்தின் கீழ் பதிவு மேலாண்மை நடைமுறைகளின் ஒரு பகுதியாக மூடப்பட்டது.
சிறப்பு பிரச்சாரம் 4.0 இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்படும், ஆயத்த கட்டம் (செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30, 2024 வரை) மற்றும் செயல்படுத்தல் கட்டம் (அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2024 வரை).
***
(Release ID: 2055943)
MM/RR/KR
(Release ID: 2055974)
Visitor Counter : 50