மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகப்பு முகாம் : சுகாதாரப் பணிகளுக்கான உபகரணங்களை வழங்கித் தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் திரு சுகந்தா மஜும்தார்

Posted On: 17 SEP 2024 1:40PM by PIB Chennai

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு சுகந்தா மஜும்தார் புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் தூய்மையே சேவை இருவார தொடக்க விழாவில் (17 செப்டம்பர் - 2 அக்டோபர் 2024) கிட்டத்தட்ட 100 தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மைப் பெட்டிகளை விநியோகித்துதூய்மைப் பணியாளர் பாதுகாப்பு முகாமைத் (சஃபாய் மித்ரா சுரக்ஷா ஷிவிர்) தொடங்கி வைத்தார். இந்தப் பெட்டகத்தில் சட்டை, தொப்பி, கை துண்டு, காலணிகள், கையுறைகள், முகமூடிகள், ஆகியவை அடங்கும்.

உயர்கல்வித் துறைச் செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, கூடுதல் செயலாளர்கள், திரு ஆனந்த்ராவ் வி.பாட்டீல்திரு எஸ் கே பர்ன்வால்; அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 அனைவருக்கும் தூய்மை உறுதிமொழி ஏற்று வைத்து நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு மஜும்தார் .

இணையமைச்சர் திரு மஜும்தார் தமது உரையில், தூய்மையை ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கியதற்காகப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். அன்றாட வாழ்வில் தூய்மையை ஏற்றுக்கொள்வதற்கு பிரதமர் உத்வேகம் அளித்ததால் அது, நாட்டின் மூலை முடுக்கெங்கும் சென்றடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். வெறும் பெயரளவுக்கு அல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் மஜும்தார் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2055555)

PLM/AG/KR


(Release ID: 2055915) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi