வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தூய்மை என்பது தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
17 SEP 2024 12:06PM by PIB Chennai
தூய்மை தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று மத்திய வர்த்தகம் - தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
"தூய்மையே சேவை 2024" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதுதில்லியில் வர்த்தக - தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தூய்மைக்கான உறுதிமொழியை செய்து வைத்த அமைச்சர், லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்து நாட்டின் எதிர்காலத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை சிறப்பாக வடிவமைப்பதாக கூறினார்.
தூய்மை இந்தியா இயக்கம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அமைச்சர் எடுத்துரைத்தார். இன்று, நாம் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, இந்த இயக்கம் கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண முடிவதாக அவர் தெரிவித்தார். கிராமங்கள் இப்போது திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக உள்ளன என்று திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
தூய்மை இயக்கத்தின் வேர்கள் மகாத்மா காந்தியின் கொள்கைகளில் காணப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
15 நாட்கள் நடைபெறும் "தூய்மையே சேவை 2024" இயக்கத்தின் ஒரு பகுதியாக, தூய்மையான இந்தியாவை உருவாக்கும் பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு அமைச்சகத்தின் அதிகாரிகள், ஊழியர்களை திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2055530)
PLM/AG/KR
(Release ID: 2055914)
Visitor Counter : 42