குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாக்பூரில் உள்ள ராம்தியோபாபா கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் டவர் தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரையில் சில முக்கிய பகுதிகளின் தமிழாக்கம்

Posted On: 15 SEP 2024 6:01PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் வணக்கம்,

உன்னதமான குணங்கள், ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட மக்களால் வளர்க்கப்பட்ட இந்த 40 ஆண்டு கால பழமையான நிறுவனத்தின் ஒரு முக்கியமான மைல்கல் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு எனக்கு பெரிய மரியாதை, ஒரு பெரிய பாக்கியம் ஆகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள டிஜிட்டல் டவர் பற்றிய முழு விவரங்களையும் அறிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த டிஜிட்டல் டவர் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நம்மை முழுமையாக மாற்றும்.

நண்பர்களே,

இன்று உலக ஜனநாயக தினம். குறிப்பாக உலக ஜனநாயக தினம் என்று நான் கூறுவதற்குக் காரணம், இந்த ஆண்டு உலக ஜனநாயக தினத்தின் மையக்கருத்து நல்ல நிர்வாகத்திற்கான கருவியாக செயற்கை நுண்ணறிவு என்பதாகும். இதுதான் கருப்பொருள். என்ன ஒரு சிறந்த சந்தர்ப்பம்!

இந்த டிஜிட்டல் டவர் ஒரு இயற்பியல் கோபுரமாகும். இது உங்கள் திறமையை மலரச் செய்ய தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. அதிநவீன உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், புதுமை, கல்வியில் சிறந்து விளங்குவதற்கான தேடல் ஆகியவற்றுடன் ஆழமாக பின்னிப்பிணைந்த எதிர்காலத்திற்கான பல்கலைக்கழகத்தின் பார்வை சிறப்பானது.

புரோஹித் அவர்கள் கல்வியை வளர்ப்பதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். உறுதியான நம்பிக்கையுடன் அதைச் செய்திருக்கிறார். அவரது மரபு இந்த வளாகத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் உள்ளதுபன்வாரிலால் புரோஹித் என்ற நபரைப் பற்றி எனக்கு ஒரு பெரிய சிந்தனை வந்தது. கல்வி வணிகமாக சுரண்டப்படும் காலங்களில், கல்வி வணிகமாக மாறியுள்ள காலங்களில், பன்வாரிலால் புரோஹித்தின் வாழ்நாள் பயணம் நம்பிக்கை, உத்வேகம், உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளது. நமது நாகரிக நெறிமுறைகளின்படி சமூகத்திற்குப் பலன்களைத் திருப்பித் தர வேண்டும்மக்களுக்கு கல்வியை வழங்குவதை விட பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது.

தரமான கல்வி ஜனநாயகத்தை வரையறுக்கிறது. நீங்கள் பெறும்  தரமான கல்வி, சிறுவர், சிறுமியர் வளர்ச்சியை வரையறுக்கிறது. இது 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியடைந்த தேசத்தை அடைவதை விரைவுபடுத்தும். ஒரு காலத்தில் இந்தியாவை தூங்கும் நாடு என்று மக்கள் அழைத்தனர். இந்தியா இனி தூங்கும் நாடு அல்ல. வளர்ச்சி அதிகரித்து வருகிறது. உயர்வு தடுக்க முடியாதது. இந்த உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார எழுச்சி அதிவேகமானது.

உலகளாவிய நிறுவனங்களின் கூற்றுப்படி, முதலீடு, வாய்ப்புகளுக்கான விருப்பமான இடமாக இந்தியா உள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்மாதிரி என்று உலக வங்கி பாராட்டியுள்ளது. டிஜிட்டல்மயமாக்கல் செய்வது எப்படி? நம்மைப் போன்ற ஒரு நாட்டில், 100 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று முறை நேரடி பணப்பலன் பெறுகிறார்கள்அரசு இதுபோன்ற மாற்றங்களை அமல்படுத்துகிறது. அதாவது கசிவு இல்லை. இடைத்தரகர்கள் இல்லை, மனித தலையீடு இல்லை. முழு பொறுப்புணர்வு, முழுமையான வெளிப்படைத்தன்மை உள்ளது.

மேலும், இது ஒரு பெரிய பொருளாதார நன்மையைக் கொண்டுள்ளது. இது நமது பொருளாதாரத்தை முறையான ஒன்றாக மாற்றுகிறது. நமது வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

மிக்க நன்றி.

*****

PLM / KV

 

 



(Release ID: 2055231) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi