பாதுகாப்பு அமைச்சகம்

பெண்களின் கடல் பயணம் II - இரண்டு இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் பாய்மரப் பயணத்தை மேற்கொண்டு உலகைச் சுற்றி வரவுள்ளனர்

Posted On: 15 SEP 2024 1:39PM by PIB Chennai

கடல்சார் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, பாய்மர பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளிக்க இந்திய கடற்படை குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஐஎன்எஸ் தரங்கிணி, ஐஎன்எஸ் சுதர்ஷினி ஆகிய பாய்மரப் பயிற்சிக் கப்பல்களின் முன்னோடி முயற்சிகள், ஐஎன்எஸ்வி கப்பல்களான மதேய் தாரிணி ஆகியவற்றின் கடல் பயணத்தின் மூலம், இந்தியக் கடற்படை, பெருங்கடல் பாய்மரப் பயணங்களில் மைய இடத்தைப் பிடித்துள்ளது.

கடல்சார் திறன், சாகச கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, இரண்டு இந்திய கடற்படை பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் ரூபா, லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கே ஆகியோர் ஐஎன்எஸ்வி தாரிணி கப்பலில் உலகைச் சுற்றி வரும் அசாதாரணப் பயணத்தை மிக விரைவில் தொடங்க உள்ளனர் . இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பயணத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

ஆறு பேர் கொண்ட குழுவில் ஒரு பகுதியாக அதிகாரிகள் கடந்த ஆண்டு கோவாவிலிருந்து கேப் டவுன் வழியாக ரியோ டி ஜெனிரோ வரை கடல் கடந்த பயணத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு, அதிகாரிகள் கோவாவிலிருந்து ஸ்ரீ விஜயபுரம் (முன்பு போர்ட் பிளேர்) வரை ஒரு பாய்மரப் பயணத்தை மேற்கொண்டனர். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவாவிலிருந்து மொரீஷியஸின் போர்ட் லூயிஸுக்கு இருவரும் வெற்றிகரமாக சென்றனர்.

சாகர் பரிக்கிரமா தீவிர திறன்கள், உடல் தகுதி, மன விழிப்புணர்வு தேவைப்படும் ஒரு கடினமான பயணமாக இருக்கும். அதிகாரிகள் கடுமையாக பயிற்சி பெற்று ஆயிரக்கணக்கான மைல் பயண அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

.என்.எஸ்.வி தாரிணி கடற்பயணம், இந்தியாவின் கடல்சார் தொழில், கடல்சார் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். உலகளாவிய கடல்சார் நடவடிக்கைகளில் நாட்டின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும், ஆழ்கடலில் பாலின சமத்துவத்தையும் இது வெளிப்படுத்தும்.

இந்த வரலாற்று நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், இந்தியக் கடற்படை பெருமையுடன் பயணத்தின் சின்னத்தை வெளியிட்டது. அதன் மையத்தில் உள்ள எண்கோண வடிவம் இந்திய கடற்படையை சித்தரிக்கிறதுபாலின சமத்துவத்தின் சிறப்பை வளர்ப்பதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டிற்கு இந்த பயணத்தின் பெண் குழுவினர் சான்றாக உள்ளனர்.

*****

PLM / KV

 

 



(Release ID: 2055186) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi , Marathi