தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அலுவல் மொழி இந்தி 75-வது ஆண்டு கொண்டாட்டம் – இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவு தபால் தலையை வெளியிட்டார்
Posted On:
14 SEP 2024 4:55PM by PIB Chennai
14 செப்டம்பர் 2024 அன்று, இந்தி மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. அலுவல் மொழியின் வைர விழா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, 1949 செப்டம்பர் 14 அன்று அரசியல் நிர்ணய சபை எடுத்த வரலாற்று முடிவை நினைவுகூருகிறது, அப்போது தேவநாகரி எழுத்துக்களில் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக நியமிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவல் மொழித் துறை, 1975 இல் நிறுவப்பட்டதிலிருந்து அதிகாரப்பூர்வ விஷயங்களில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை கௌரவிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 14 செப்டம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக 75 ஆண்டுகளைக் குறிக்கும் ஒரு பிரமாண்டமான விழாவில் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "இன்று, இந்தி மொழி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் வரலாற்று சந்தர்ப்பத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதில் இந்தி மொழியின் பங்களிப்பை இந்த முத்திரை கொண்டாடுகிறது, மேலும் புதிய மற்றும் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில் அதன் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது.
நாட்டிலும், உலகெங்கிலும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதி செய்வதில் 'இந்தி' மொழியின் முக்கியத்துவத்தை இந்த அஞ்சல் தலை தொடர்ந்து நமக்கு நினைவூட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!" என்று பேசினார்.
அஞ்சல் துறையின் இந்த நினைவு அஞ்சல் தலை நாட்டை ஒன்றிணைப்பதிலும், பல்வேறு மொழி பேசும் சமூகங்களுக்கு சேவை செய்வதிலும் இந்தி மொழியின் நீடித்த பங்கிற்கு மரியாதை செலுத்துகிறது. இது கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் நிர்வாக மற்றும் கலாச்சார நிலப்பரப்பில் இந்தி மொழியின் குறிப்பிடத்தக்க பயணத்தை கொண்டாடுகிறது..
*****
PKV/ KV
(Release ID: 2055033)
Visitor Counter : 49