விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். விவசாயிகளின் நலனுக்காக அரசு சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது: திரு. சிவராஜ் சிங் சவுகான்

Posted On: 14 SEP 2024 3:42PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி விவசாயிகளுக்கு உகந்தவர் என்றும், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனே அவரது முன்னுரிமை என்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசு சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. விவசாயிகளுக்கு உகந்த மோடி அரசு சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை 0 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது என்றும், மற்ற கூறுகளைச் சேர்த்து மொத்த வரி 27.5 சதவீதமாக இருக்கும் என்றும் திரு சவுகான் கூறினார். இந்த நடவடிக்கையின் மூலம், அனைத்து எண்ணெய் வித்து விவசாயிகளும், குறிப்பாக சோயாபீன் மற்றும் பச்சை பயறு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இதனுடன், ராபி பருவத்தில் எண்ணெய் வித்துக்கள் விதைப்பு அதிகரிக்கும், கடுகு விளைச்சலுக்கும் நல்ல விலை கிடைக்கும். இந்த முடிவின் மூலம், சோயா உற்பத்தியும் அதிகரிக்கும், அது ஏற்றுமதி செய்யப்படும் என்றும், இதனுடன், சோயா தொடர்பான பிற துறைகள் / பகுதிகளும் நன்மைகளைப் பெறும் என்றும் திரு சவுகான் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முக்கியமான முடிவுக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மோடி அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்றும், பாசுமதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி வரியை நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் திரு சவுகான் கூறினார். ஏற்றுமதி வரி நீக்கப்படுவதன் மூலம், பாஸ்மதி உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவார்கள் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக பாசுமதி அரிசிக்கான தேவை அதிகரிக்கும் மற்றும் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளின் வளர்ச்சிக்கு மோடி அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரியை 32.5% ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் மேலும் கூறினார். இந்த முடிவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கான கடுகு, சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை பயிர்களின் தேவையை அதிகரிக்கும்.

இந்த பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்று கூறிய திரு சவுகான், சிறு மற்றும் கிராமப்புறங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கூறினார். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு மோடி அரசு உறுதிபூண்டுள்ளது, மேலும் வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40%-லிருந்து 20% வரை குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வரி குறைப்பதன் மூலம், வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும், வெங்காய ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கும் வெங்காயம் தொடர்பான பிற துறைகளுக்கும் நேரடியாக பயனளிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்..

*****

PKV/ KV

 

 


(Release ID: 2055006) Visitor Counter : 61


Read this release in: Odia , English , Urdu , Marathi , Hindi