சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு பிரச்சாரம் 4.0 –த்துக்கு சட்ட விவகாரங்கள் துறை  முன்னேற்பாடு

प्रविष्टि तिथि: 14 SEP 2024 4:01PM by PIB Chennai

தூய்மையை ஊக்குவிப்பதற்கும், அனைத்து வகையான நிலுவையில் உள்ள வழக்குகளையும் குறைப்பதற்கும் சட்ட விவகாரங்கள் துறை சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் ஆயத்த கட்டத்தை தொடங்க உள்ளது. இந்த இயக்கம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்தக் காலகட்டத்தில், பிரதமர் அலுவலகம், மாநில அரசுகள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு குறிப்புகள் மற்றும் அமைச்சரவை செயலகத்திலிருந்து குறிப்புகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் தொடர்பான இலக்குகளை இத்துறை அடையாளம் காணும். சிறப்பு முகாம்கள் 4.0 நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துறையின் அனைத்து இணைக்கப்பட்ட அலுவலகங்களுடனும் மற்றும் பல்வேறு பிரிவுகளுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய செயலக நடைமுறை கையேடு மற்றும் பதிவேடுகள் தக்கவைத்தல் அட்டவணை தொடர்பாக இத்துறையின் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி மற்றும் பணிப்பட்டறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், கோப்புகளை களையெடுத்தல், துறைக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் குறித்த தகவல்களை சிபிகிராம்ஸ் உட்பட பல்வேறு வலைதளங்களில் புதுப்பித்தல் ஆகியவை இந்தக் காலகட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன..

*****

PKV/ KV

 

 


(रिलीज़ आईडी: 2054970) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी