நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கழகம் தூய்மை பிரச்சாரத்தின் மீது முக்கிய கவனம் செலுத்துகிறது
Posted On:
14 SEP 2024 12:40PM by PIB Chennai
இந்திய உணவுக் கழகம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை தூய்மை பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம் இந்த பிரச்சாரத்தை நாடு முழுவதும் 760 இடங்களில் ஜம்மு & காஷ்மீர் முதல் கேரளா வரை (வடக்கு முதல் தெற்கு) மற்றும் குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் (மேற்கு முதல் கிழக்கு) வரை அனைத்து இந்திய உணவுக் கழக அலுவலகங்கள், மண்டல / பிராந்திய / மாவட்டம் மற்றும் தொலைதூர பகுதிகளை உள்ளடக்கிய கிடங்குகள் ஆகியவற்றில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 17 முதல் தொடங்கும் இந்தப் பிரச்சாரம் 'முழு சமூகம்' அணுகுமுறையை வலியுறுத்தும் மூன்று முக்கிய தூண்களில் கவனம் செலுத்தும்.
இந்த ஆண்டு "இயற்கையின் தூய்மை, மதிப்புகளின் தூய்மை " என்பதை மனதில் கொண்டு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் "தூய்மை" என்ற கோட்பாட்டை ஒருங்கிணைத்து, இந்திய உணவுக் கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் நெல்லை கொள்முதல் செய்கிறது. பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 50 மில்லியன் டன் உணவு தானியங்களை கொண்டு செல்வதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கோதுமை மற்றும் அரிசி கிடைப்பதை இது உறுதி செய்கிறது. இந்தக் கோதுமை மற்றும் அரிசி பின்னர் 2000 க்கும் மேற்பட்ட கிடங்குகளில் சேமிக்கப்பட்டு 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள நாடு தழுவிய நியாய விலைக் கடைகளின் நெட்வொர்க் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தின் முன்னேற்றம் வலைதளத்தில் (https://swachhatahiseva.gov.in) தொடர்ந்து கண்காணிக்கப்படும். அனைத்து குடிமக்கள், கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இந்த தேசிய இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது..
*****
PKV / KV
(Release ID: 2054931)
Visitor Counter : 47