பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லி நஜஃப்கர் பணிமனையில் மின்னணு போர் முறை மாநாடு 2024
प्रविष्टि तिथि:
13 SEP 2024 5:43PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள நஜஃப்கர் பழுதுபார்க்கும் பணிமனை, 2024 செப்டம்பர் 13 அன்று மின்னணு போர் முறை: போக்குகள், தொழில்நுட்பங்கள் & பராமரிப்பு சவால்கள் என்பதை மையக் கருத்தாகக் கொண்ட ஸ்பெக்ட்ரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாட்டை தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட விமானப்படையின் பராமரிப்புப் பிரிவு தளபதி ஏர் மார்ஷல் விஜய் குமார் கார்க், தொடங்கி வைத்தார். அவர் தனது தொடக்க உரையில், வான் உத்தியின் முக்கிய தூண்களில் ஒன்றாக மின்னணு போர்முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்திய கல்வியாளர்கள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் தொழில்களின் பங்கேற்புடன் உள்நாட்டிலேயே மின்னணு போர்முறை அமைப்புகளை மேம்படுத்தி நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
ஐ.ஐ.டி., டி.ஆர்.டி.ஓ., மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழில்துறை பங்குதாரர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். ஏர் ஆபீசர் கமாண்டிங் நஜாஃப்கர், ஏர் கமடோர் அமித் அகர்வால், பணிமனை செய்து வரும் பணிகள் மற்றும் பிற ஏஜென்சிகளிடமிருந்து தேவைப்படும் ஆதரவு ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
----
MM/KPG/DL
(रिलीज़ आईडी: 2054729)
आगंतुक पटल : 71