ஆயுஷ்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஆயுஷ் அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின் கீழ் ஒரு நெல்லி மரக்கன்றை நட்டார்

Posted On: 13 SEP 2024 5:59PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேசிய இயக்கமான 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று'-ன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், புதுதில்லியில் உள்ள ஆயுஷ் பவனில், தனது மதிப்பிற்குரிய தாயார் திருமதி சிந்துதாய் கண்பத்ராவ் ஜாதவின் நினைவாக 'நெல்லி' மரக்கன்றை இன்று நட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய முக்கியமான நடவடிக்கை என்று கூறினார். இந்த இயக்கத்தின் மூலம், தாய்மார்கள் மீதான தங்கள் பாசத்தை வெளிப்படுத்த மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இயக்கம்ம் தாய்மார்கள் மற்றும் தாய்நாட்டிற்கான மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். இந்த இயக்கத்தில் சேருவதன் மூலம், மக்கள் தங்கள் தாய் மற்றும் தாய் பூமி ஆகிய இருவருக்கும் ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை உணருவார்கள்.

இந்த இயக்கம்த்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அருகாமையில் மருத்துவ தாவரங்களை நட்டு, 'செல்ஃபி' எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்  வேண்டுகோள் விடுத்தார். இது மற்றவர்களுக்கும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை வழங்கும்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய  #தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம், நமது சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய இயக்கத்தின் வடிவத்தை எடுத்துள்ளதாக திரு பிரதாப்ராவ் ஜாதவ் குறிப்பிட்டார்.

அமைச்சருடன் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா, தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மகேஷ் தாதிச்சி மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மருத்துவ தாவர வாரியம் இந்த இயக்கம்த்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இது இந்த இயக்கத்திற்கு பொதுமக்களை ஊக்குவிக்க, சில எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ தாவரங்களின் பெயர்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. மரங்களை நடுவதுடன், மருத்துவ தாவரங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆயுஷ் அமைச்சகத்தின் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பிரதமரின் தீர்மானத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும்.

****

MM/KPG/DL



(Release ID: 2054710) Visitor Counter : 19


Read this release in: English , Marathi