அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் - தொழில்நுட்பத் துறை நாடு தழுவிய தூய்மை இயக்கத்தில் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
13 SEP 2024 12:56PM by PIB Chennai
தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் அரசாங்கத்தில் நிலுவையிலுள்ள நாட்களைக் குறைத்தல் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2023 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நாடு தழுவிய தூய்மை இயக்கம், சிறப்பு பிரச்சாரம் 3.0-ன் கீழ், தூய்மை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அதன் சார்நிலை / கள அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுடன் இணைந்து தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு, உரிய நேரத்தில் தீர்வுகாண, தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 2023 - ஆகஸ்ட் 2024 காலகட்டத்தில் துறை மற்றும் அதன் நிறுவனங்கள் செய்த சாதனைகளின் சிறப்பம்சங்கள்:
• 942 பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
• 149 பொதுமக்கள் குறை தீர்க்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி.
• 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் / முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
• 11009 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது.
• கழிவுப் பொருட்கள் அகற்றல் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.11,34,555/-.
• 159 கோப்புகள் களையெடுக்கப்பட்டன.
• 128 தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
நலத்திட்டமாக, தொழில்நுட்ப பவனில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலகப் பிரிவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களின் குழந்தைகளுக்கான குழந்தைகள் காப்பகத்தை இத்துறை அமைத்துள்ளது.
முந்தைய பிரச்சாரங்களின் நோக்கங்கள் மற்றும் சாதனைகளை உருவாக்குவதற்கும், சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் முக்கிய நோக்கங்களை அடைவதற்கும் அறிவியல் தொழில்நுட்பத் துறை முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
***
MM/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2054622)
आगंतुक पटल : 66