பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
13 SEP 2024 4:23PM by PIB Chennai
மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (13.09.2024) தமது அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, மேம்பட்ட சேவை வழங்கலை உறுதி செய்வதற்காக மினி அங்கன்வாடி மையங்களை முழு அளவிலான அங்கன்வாடி மையங்களாக தரம் உயர்த்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்த வகையில், ஜார்க்கண்டில் 2,551 சிறிய அங்கன்வாடி மையங்களை முழு அங்கன்வாடி மையங்களாக மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6850 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
பழங்குடியின சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பிரதமரின் உறுதிப்பாடு குறித்தும், குறிப்பாக பிரதமரின் ஜன்மன் திட்டம் குறித்தும் அவர் பேசினார். இதை வெற்றிகரமாக செயல்படுத்த, ஜார்க்கண்டில் உள்ள 111 அங்கன்வாடி மையங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் ஊட்டச்சத்து மாத கொண்டாட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். இதன் கீழ், நாடு முழுவதும் 3.8 கோடிக்கும் அதிகமான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு மனோஜ் குமார், மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு ஞானேஷ் பாரதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர்-ஜன்மான் திட்டத்தை செயல்படுத்துதல், அங்கன்வாடி பணியாளர்கள் (AWWs),மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சியை மேம்படுத்துதல், மாநிலத்தின் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளில் (ICDS) செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்வது போன்ற முன்னுரிமை பகுதிகளில் அதிக கவனம் செலுத்துமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
-----------
PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2054612)
आगंतुक पटल : 81