நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
13 SEP 2024 12:37PM by PIB Chennai
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் நிறுவப்பட்ட குறை பகுதி நீதித்துறை அமைப்பான தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் உறுப்பினர்கள் பதவிக்கான இரண்டு காலியிடங்களை நிரப்ப, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள, நுகர்வோர் விவகாரங்கள் துறை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஒரு விண்ணப்பதாரரை நியமிப்பதற்கான தகுதிகள், சம்பளம் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் மற்றும் தீர்ப்பாய (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 ஆகியவற்றின் விதிகளால் நிர்வகிக்கப்படும்.
இந்தப் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயர்களை பரிந்துரைப்பதற்காக, தீர்ப்பாய சீர்திருத்தங்கள் சட்டம் 2021-ன் கீழ் அமைக்கப்பட்ட தேடல் மற்றும் தேர்வுக் குழு, வேட்பாளர்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து, பதவிகளுக்கான விண்ணப்பங்களின் பொருத்தம் குறித்து விண்ணப்பங்களை ஆய்வு செய்யும். தகுதி, அனுபவம் மற்றும் தனிப்பட்ட தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில், குழுவால் மேற்கொள்ளப்படும் வேட்பாளர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.
தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம், 2021, தீர்ப்பாயங்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையங்கள்) விதிகள் ஆகியவை அமைச்சகத்தின் இணையதளமான www.consumeraffairs.nic.in
-ல் உடனடி குறிப்புக்காக வைக்கப்பட்டுள்ளன.
தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 17.09.2024 முதல் URL: jagograhakjago.gov.inncdrc
மூலம் ஆன்லைனில் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.10.2024. பொருந்தும் இடங்களில், ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை, பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் முறையான வழிமுறை மூலம் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர், அறை எண் 466-ஏ, கிருஷி பவன், புது தில்லி என்ற முகவரியில் 2024 அக்டோபர் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
---
(Release ID 2054449)
MM/KPG/KR
(Release ID: 2054519)
Visitor Counter : 45