அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
காந்தங்களில் கண்டறியப்பட்ட நீர் முரண்பாடு சாதனங்களில் வெப்பக் கட்டுப்பாட்டுக்கு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது
Posted On:
12 SEP 2024 5:48PM by PIB Chennai
ஒரு காந்தப் பொருளில், ஒரு பாரா காந்த நிலை, இதில் பொருள் ஒரு காந்தப்புலத்திற்கு வெளிப்படும் போது பலவீனமான தற்காலிக ஈர்ப்பைக் காட்டுகிறது. இது ஃபெரோ காந்த கட்டத்தை விட அதிக வெப்பநிலையில் அடையப்படுகிறது. ஆச்சரியப்படும் வகையில், வெப்பமான பாரா காந்தங்கள், வெப்ப இயக்கவியல் முறையில் நீண்ட தூரம் பயணித்தாலும், அவற்றின் ஃபெரோ காந்த கட்டங்களுக்கு விரைவான மாற்றங்களுக்கு உட்படுகின்றன என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.
முன்பு நீரில் காணப்பட்ட எம்பெம்பா விளைவு என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு காந்தங்களிலும் இருப்பதை நிறுவும் ஆராய்ச்சி, சாதனங்களில் வெப்பக் கட்டுப்பாட்டுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை கொண்டு வர முடியும்.
எம் பெம்பா (Mpemba) விளைவு என்பது ஒரு முரண்பாடான நிகழ்வாகும். இதில் ஒரு சூடான திரவம் சில நிபந்தனைகளின் கீழ் குளிர்ந்த திரவத்தை விட வேகமாக குளிர்ச்சியடையலாம் அல்லது உறையலாம். அரிஸ்டாட்டில் தமது மெட்டீரோலாஜிகா என்ற புத்தகத்தில் விவரித்த விளைவு, 1960 களில் தான்சானியாவில் அப்போது பள்ளி மாணவனாக இருந்த எராஸ்டோ எம்பெம்பா என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபகாலமாக, இந்த தலைப்பு பல்வேறு களங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கோட்பாட்டு ரீதியாகவும் சோதனை ரீதியாகவும் நீரைத் தவிர பிற அமைப்புகளில் இந்த விளைவை ஆராய முயற்சிகள் இருந்தாலும், அது நிகழ்வதற்கான காரணம் ஒரு புதிராகவே உள்ளது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்) விஞ்ஞானிகள் இத்தகைய காந்த மாற்றங்களை ஆய்வு செய்தனர். மேலும் வெப்பமான பாராகாந்தங்கள் அவற்றின் ஃபெரோகாந்த கட்டங்களுக்கு விரைவான மாற்றங்களுக்கு உட்படுவதைக் கண்டறிந்தனர்.
பல்வேறு ஆரம்ப நிலைகளில் கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த காந்த மாற்றங்களில் விளைவு தோன்றுகிறது என்பதைக் காட்டும் சுவாரஸ்யமான உலகளாவிய படத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாகக் கண்டறிந்துள்ளனர்.
இவற்றை அடையாளம் காண்பது, அடிப்படை மட்டத்தில் புதிய அறிவை வழங்குவதோடு கூடுதலாக, சாதனங்களில் வெப்பக் கட்டுப்பாட்டுக்கு ஒரு புதிய செயல்பாட்டை வழங்குதல் அல்லது சிறந்த குளிரூட்டும் உத்திகளை வரையறுத்தல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
URL: https://link.aps.org/doi/10.1103/PhysRevE.110.L012103
------------
(Release ID: 2054232)
PLM/RS/KR
(Release ID: 2054422)
Visitor Counter : 43