நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நேரடி வரிகள் வாரியம் சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்கிறது

प्रविष्टि तिथि: 12 SEP 2024 8:10PM by PIB Chennai

மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்கம் நடத்தி, நிலுவையில் உள்ள குறைகளை தீர்க்க சிறப்பு முகாம் மூலம் தீர்வு காணும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடைபெறம் சிறப்பு இயக்கம் 4.0-ல் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), அதன் துணை அலுவலகங்களுடன், பங்கேற்க தயாராகி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வருமான வரித் துறை அலுவலகங்களில் தூய்மை குறித்த சிறப்பு இயக்கத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அலுவலக இடங்களை மேம்படுத்துதல், திறமையான மேலாண்மை, சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகள், சுற்றுச்சூழலுகேற்ற நடைமுறைகள், மக்களை மையமாகக் கொண்ட முயற்சிகள் போன்றவற்றை நோக்கிய பல்வேறு நடவடிக்கைகளும் நாடு முழுவதும் வழக்கமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய நேரடி வரிகள் வாரியம் பல்வேறு பிராந்தியங்களில் சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது.

***

(Release ID: 2054324)

PLM/RS/KR


(रिलीज़ आईडी: 2054421) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी