தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உள்ளூர் தொழில்முனைவோரை உலக சந்தையுடன் இணைப்பதில் 'தக் கர் நிர்யத் கேந்திரா' முக்கிய பங்கு வகிக்கிறது

Posted On: 12 SEP 2024 7:03PM by PIB Chennai

தபால் துறை தொடர்ந்து தனது சேவைகளை விரிவுபடுத்தி, புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து, சமூகத்தின் கடைசி மைல்களை சென்றடைந்து வருகிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உள்ளூர் தொழில்முனைவோருக்காக பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'தக் கர் நிர்யத் கேந்திரா' (DakgharNiryat Kendra -DNK) என்பது உள்ளூர் வணிகங்களின் ஏற்றுமதி திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இப்போது, ஓடிஓபி (ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு), ஜிஐ (புவிசார் குறியீடு), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றின் தயாரிப்புகள் அஞ்சல் கட்டமைப்பு மூலம் உலகளாவிய சந்தைகளை விரைவாக அடையும். குஜராத் தொழில் வர்த்தக சபை, அகமதாபாத்தில் ஏற்பாடு செய்திருந்த 'ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் தபால் சேவைகளில் முன்னேற்றம்' என்ற கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய வடக்கு குஜராத் பிராந்தியத்தின் அஞ்சல் தலைமை இயக்குநர் திரு கிருஷ்ண குமார் யாதவ் இது குறித்து விரிவாக விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஏற்றுமதியாளர்களுடன் விரிவான கலந்துரையாடலுடன் பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி மூலம் தபால் சேவைகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தபால் சேவை மூலம் வர்த்தக ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதியாளர்களுக்கு தக் கர் நிர்யத் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக திரு கிருஷ்ண குமார் யாதவ் தெரிவித்தார். ஏற்றுமதியாளர்கள் டி.என்.கே மூலம் பார்சல்களை முன்பதிவு செய்ய தபால் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை; அவர்கள் தங்கள் வளாகத்திலிருந்தே முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் சுங்க அனுமதியும் கிடைக்கிறது. ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், பார்கோடுகளுடன் லேபிள்களை அச்சிடுதல், ஏற்றுமதிக்கான அஞ்சல் மசோதாவை ஆன்லைனில் தாக்கல் செய்தல்,  ஆவணம் இல்லாத சுங்க அனுமதி ஆகியவற்றை டி.என்.கே எளிதாக்குகிறது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், கைவினைஞர்கள், வர்த்தகர்கள், சுய உதவிக் குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுமதி செய்ய டிஎன்கே சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

***

(Release ID: 2054277)

PLM/RS/KR



(Release ID: 2054417) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi , Gujarati