புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2024, ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் வெளியீடு

Posted On: 12 SEP 2024 5:30PM by PIB Chennai

2024, ஆகஸ்ட்  மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

I. முக்கிய சிறப்பம்சங்கள்:

1. 2024, ஆகஸ்ட்  மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 3.65% ஆகும். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது மிகக் குறைந்த அளவாகும். கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதங்கள் முறையே 4.16%, 3.14% ஆகும்.

2. பணவீக்கத்தின் வீழ்ச்சி 'நறுமணப் பொருட்கள்', 'இறைச்சி, மீன்', 'பருப்பு வகைகள் போன்ற துணைப் பிரிவுகளில் காணப்படுகிறது.

3. ஆகஸ்ட் 2024 க்கான உணவு பணவீக்கம் ஜூன் 2023 க்குப் பிறகு இரண்டாவது மிகக் குறைவாகும். அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டெண் (CFPI) அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024, ஆகஸ்ட்  மாதத்தில் 5.66% (தற்காலிகமானது). கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 6.02%, 4.99% ஆகும்.

4. 'தக்காளி' ஆண்டு பணவீக்கம் (-47.91%), குறியீட்டில் மிகக் குறைந்த மாதாந்திர மாற்றத்தை (-28.8%) வெளிப்படுத்தியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் விலைத் தரவுகள் புள்ளியில் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் களச் செயல்பாட்டுப் பிரிவின் களப் பணியாளர்களால் வாராந்திர சுழற்சி மூலம் சேகரிக்கப்படுகின்றன. 2024 ஆகஸ்ட்  மாதத்தில், 100.0% கிராமங்கள், 98.6% நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சந்தை வாரியான விலைகள் கிராமப்புறங்களுக்கு 88.3%, நகர்ப்புறங்களுக்கு 92.4% ஆகும்.

2024, செப்டம்பருக்கான அடுத்த வெளியீட்டு தேதி அக்டோபர் 14 (திங்கட்கிழமை) ஆகும். மேலும் விவரங்களுக்கு www.mospi.gov.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054203  

***

PLM/RS/KR



(Release ID: 2054416) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi , Manipuri