புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

2024 நவம்பரில் நடைபெறும் ஐரோப்பிய ஹைட்ரஜன் வாரத்திற்கான பிரத்யேக பங்குதாரராக இந்தியா இருக்கும்

Posted On: 12 SEP 2024 7:40PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டின் இரண்டாவது நாளில், 2024 நவம்பரில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஹைட்ரஜன் வாரத்துடன் இந்தியாவின் பிரத்யேக கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது. ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை விதிமுறைகளை நிவர்த்தி செய்வதற்கான இந்தியாவின் நோக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், அம்மோனியா இறக்குமதி முனையங்களுக்காக நெதர்லாந்தைச் சேர்ந்த சேன் டெர்மினல் மற்றும் இந்தியாவின் ஏ.சி.எம்.இ கிளீன்டெக் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

பசுமை ஹைட்ரஜன் துறையில் உள்ள நோக்கம் மற்றும் சவால்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தின் முன்னோக்குகளை வெளிப்படுத்தும் அமர்வுகளையும் இந்த நிகழ்வு கண்டது. இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் தலைமையில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய அமர்வு, ஹைட்ரஜன் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு  ஜோர்கோ சாட்ஜிமர்காகிஸ் ஆகியோர் உலகளாவிய கார்பன் வெளியேற்ற முயற்சிகளில் பசுமை ஹைட்ரஜனின் பங்கு குறித்து கவனம் செலுத்தினர். புதைபடிவ எரிபொருட்களுக்கு போட்டியாக ஹைட்ரஜனை அளவிடுவதை ஊக்குவிப்பதற்காக, கார்பனை திறம்பட விலை நிர்ணயிக்க உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உமிழ்வு வர்த்தக முறையை சீர்திருத்துவதில் கவனம் செலுத்துகிறது என்பதை விவாதம் எடுத்துக்காட்டுகிறது.

 

இதைத் தொடர்ந்து,இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் ஜெயின், சி.எஸ்.ஐ.ஆர்.ஓ ஹைட்ரஜன் தொழில் இயக்கத்தின் தலைவர் டாக்டர் பேட்ரிக் ஹார்ட்லியுடன் பேசினார். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுடன், தொழில்துறை விரிவாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் மேம்பாடு ஆகியவற்றை இயக்குவதற்கு ஒத்துழைப்பு அவசியம் என்று டாக்டர் பேட்ரிக் ஹார்ட்லியுடன் வலியுறுத்தினார். ஒழுங்குமுறை கட்டமைப்புகள், சேமிப்பு தீர்வுகள் மற்றும் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அணுகல் ஆகியவை ஹைட்ரஜன் துறைக்கு முக்கியமான சவால்களாக உள்ளன.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைசெயலாளர் டாக்டர் அபய் கரண்டிகர் தலைமையிலான நெதர்லாந்து அமர்வு, உலகளாவிய ஹைட்ரஜன் முன்னேற்றங்களை முன்னெடுப்பதற்கான நெதர்லாந்தின் விரிவான கண்ணோட்டத்தை முன் வைத்தது. இந்த அமர்வில் ஹைட்ரஜன் சர்வதேச திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை கொள்கை அமைச்சகத்தின் மூத்த கொள்கை ஆலோசகருமான திரு ஹான் ஃபீன்ஸ்ட்ரா கலந்து கொண்டார்.

 

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான சாய்னா நேவால், "நிலையான எதிர்காலத்தை நோக்கிய நமது முயற்சியில், வரும் தலைமுறைகளுக்காக நாம் விட்டுச் செல்லும் உலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்" என்று பேசினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054296

BR/KR

 

 

***



(Release ID: 2054414) Visitor Counter : 14


Read this release in: Kannada , English , Hindi