வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இலக்குகளை அடைய முழு உற்சாகத்துடன் சிறப்பு இயக்கம் 4.0 க்கான ஏற்பாடுகள்

Posted On: 12 SEP 2024 6:48PM by PIB Chennai

தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 19 அமைப்புகளில் நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கும் சிறப்பு இயக்கம் 4.0 ஐ செயல்படுத்த தயாராகி வருகிறது. இயக்கத்தின் ஆயத்த கட்டம் 2024 செப்டம்பர் 16 முதல் 30 வரை நடைபெறும். செயல்படுத்தல் கட்டம் 2 அக்டோபர் 2024 முதல் தொடங்கி 31 அக்டோபர் 2023 வரை நீடிக்கும். இதில் செயலாக்க நிலையில், கண்டறியப்பட்ட இலக்குகளை அடைவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

சிறப்பு இயக்கத்தின் ஆயத்த கட்டத்தின் தொடக்கத்துடன், சிறப்பு இயக்கம் 4.0 ஐ நடத்துவதற்காக நாடு முழுவதும் பரவியுள்ள அதன் 19 இணைக்கப்பட்ட, துணை, தன்னாட்சி அமைப்புகளின் கீழ் சுமார் 70 கள / வெளியூர் அலுவலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிறப்பு முகாம் 4.0-க்கு தயாராகும் வகையில் அனைத்து களப்பணியாளர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் பகிரப்பட்டுள்ளன. நிலை அதிகாரிகளுக்கு பதிவு மேலாண்மை குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.

டிபிஐஐடி அதன் முந்தைய நிர்வாக செயல்திறனில், தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும்  நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கும் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்தது.

***

(Release ID: 2054259)

PLM/RS/KR

 


(Release ID: 2054412) Visitor Counter : 37


Read this release in: English , Urdu