வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுடன் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
12 SEP 2024 6:50PM by PIB Chennai
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிபுணத்துவத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், சென்னை விஐடி, ஹைதராபாத்தில் உள்ள வோக்சன் பல்கலைக்கழகம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களுடன் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், சர்வதேச தரத்திற்கு இணையாக காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் அதன் சிறப்பின் தரத்தை உயர்த்துவதில் காலணி வடிவமைப்பு மற்றும் நிபுணத்துவத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் சுமீத் ஜராங்கல், கூட்டு ஆராய்ச்சிக்கு உந்துதலளிக்கும் இந்த முன்னோடி முயற்சி, ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் குறிப்பாக காலணி மற்றும் தோல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த கூட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு படிப்புகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், அறிவு பரிமாற்றத்தை எளிதாக்குதல், காலணிகள், தோல் பொருட்கள் மற்றும் பேஷன் தயாரிப்புகளில் புதுமையை ஊக்குவித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வாறு ஒத்துப்போகும் என்பதை அவர் குறிப்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054260
***
IR/RS/DL
(Release ID: 2054320)
Visitor Counter : 60