மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமிர்த கட்லா வகை மீன்கள் வெளியீடு

Posted On: 12 SEP 2024 6:00PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்  துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், புவனேஸ்வரில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில்  மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட அமிர்த கட்லா மீன்களை இன்று அறிமுகப்படுத்தினார். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் தேசிய நன்னீர் மீன் குஞ்சு வங்கி  அமிர்த கட்லா வகையைப் பெற்றது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அதன் பரவலான விநியோகம் மற்றும் கிடைப்பதை உறுதி செய்தது. இந்த வளர்ச்சி நன்னீர் மீன்வளர்ப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், இந்தியாவின் வளர்ந்து வரும் மீன் வளர்ப்பு சமூகத்திற்கு மீன் குஞ்சுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனம் 2010-ம் ஆண்டில் அறுவடையின் போது கட்லாவின் உடல் எடையை மேம்படுத்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க திட்டத்தைத் தொடங்கியது, இது உயர்தர மீன் விதைகளின் தேவையை நிவர்த்தி செய்தது. இந்தத் திட்டம் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஆந்திரா, உத்தரபிரதேசத்திலிருந்து பெறப்பட்ட  ஒன்பது கட்லா சினைகளைச் சேகரித்தது. இவை தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க திட்டத்திற்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டன.

ராஜீவ் ரஞ்சன் சிங் தமது உரையில், ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனை உறுதி செய்வதற்காக மீன்வளத் துறையில் ஆராய்ச்சி முயற்சிகளுக்கு அமைச்சகம் கணிசமான ஆதரவை வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். நன்னீர் மீன்களுக்கான கரு இனப்பெருக்க மையமாக ஐ.சி.ஏ.ஆர்-சி.ஐ.எஃப்.ஏவை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது, இது இந்தியாவில் உயர்தர மீன் குஞ்சுகளை வளர்ப்பதில் அதன் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் மற்றும் மீன்வளத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

*****

PKV/KPG/DL


(Release ID: 2054304) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi , Odia